
கிழக்கு வாழ் மக்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்...!!
கிழக்கு மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள 32 பாடசாலைகளைத் தவிர ஏனைய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் நாளை திறக்கப்படவுள்ளன.
அதேநேரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 25 பாடசாலைகள் தவிர்ந்த, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏனைய சகல பாடசாலைகளும் நாளைய தினம் திறக்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் க. கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட அரசாங்க காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற மாவட்ட கொரோனா செயணிக் கூட்டத்தில் எடுக்கப்படட தீர்மானங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு அறிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.