
களுத்துறை சிறைச்சாலை மதிற்சுவருக்கு மேலாக எறியப்பட்ட பொதியொன்று அதிகாாிகளால் கண்டெடுப்பு!
களுத்துறை சிறைச்சாலை மதிற்சுவருக்கு மேலாக எறியப்பட்ட தடைசெய்யப்பட்ட பொருட்களடங்கிய பொதியொன்று சிறைச்சாலை அதிகாாிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் இப்பொதி எறியப்பட்டிருப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தொிவித்துள்ளது.
அப்பொதியிலிருந்த 4 கையடக்க தொலைபேசிகள், 7 சிம் காட்கள், 10 கிராம் கேரள கஞ்சா, 2 பைக்கற் ஐஸ் மற்றும் 12 புகையிலை போன்றன சிறைச்சாலை அதிகாாிகள் வசமாக்கப்பட்டுள்ளன.