நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்பைப் பேணிய மேலும் 7 பேருக்கு பி.சீ.ஆர். பாிசோதனை!

நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்பைப் பேணிய மேலும் 7 பேருக்கு பி.சீ.ஆர். பாிசோதனை!

கொவிட்-19 தொற்றுறுதியான நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்பில் இருந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்களை, பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளவும், சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தமது ட்விட்டர் தளத்தில் தகவல் வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து தாம் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு சென்றுள்ளதாகவும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இதேநேரம், தம்முடன் கடந்த 10 நாட்களுக்குள் தொடர்பை பேணியவர்கள் உரிய சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் அவர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.