
சட்ட விரோதமாக கடத்தப்பட்ட காய்ந்த மஞ்சளுடன் இந்தியர்கள் 12 பேர் கைது!
கடல் மார்க்கமாக சட்ட விரோதமான முறையில் நாட்டிற்கு கடத்துவதற்கு முயற்சித்த 8768 கிலோ கிராம் காய்ந்த மஞ்சள் தொகை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அண்மையில் வயம்ப கடற் பிரதேசத்தில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 12 இந்தியர்களுடன் இம்மஞ்சளும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியர்கள் 12 பேரும் அவர்கள் பயணித்த படகு தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக கடற்படையினாிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.