
நாளை முதல் பாடசாலைகள் ஆரம்பம்!
மேல்மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும், இரண்டு முதல் 13 வரையான தரங்களின் மாணவர்களது கற்றல் செயற்பாடுகளுக்காக நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளன.
சுகாதார துறையின் பரிந்துரைகளுக்கு அமைய, இந்த மாதம் 25 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த, மேல் மாகாணத்தில் உள்ள ஏனைய அனைத்து பாடசாலைகளினதும் 11 ஆம் தரத்திற்கான கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.