நாட்டில் நேற்று தொற்றுறுதியானவர்களில் அதிகளவானோர் கொழும்பில் பதிவு!

நாட்டில் நேற்று தொற்றுறுதியானவர்களில் அதிகளவானோர் கொழும்பில் பதிவு!

நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 535 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் 148 பேருக்கும் கண்டியில் 111 பேருக்கும் கேகாலையில் 64 பேருக்கும் மேலும் 212 பேர் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் அடையாளம் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது

இதேவேளை பிரண்டிக்ஸ் மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணிகளில் இதுவரையில் 44 ஆயிரத்து 60 பேருக்கு இதுவரையில் தொற்றுறுதியாகியுள்ளது

அவர்களில் 38 ஆயிரத்து 80 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் 47 ஆயிரத்து 839 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதோடு அவர்களில் 40 ஆயிரத்து 837 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை நாட்டிலுள்ள 76 தனிமைப்படுத்தல் மையங்களில் 6 ஆயிரத்து 150 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுதவிர நேற்றைய தினம் மாத்திரம் 17 ஆயிரத்து 217 பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.