பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக 500 வீடுகள் நிர்மாணம்...!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக 500 வீடுகள் நிர்மாணம்...!

இந்திய உதவியின் கீழ் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக 500 வீடுகளை நிர்மாணித்து கொடுக்க அந்த நாட்டின் அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.

தொழில் அமைச்சில் இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளுக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரு நாடுகளுக்கு இடையிலான உறவினை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.