இயற்கைப் பேரழிவுகள் தொடர்பாக முன்னெச்சாிக்கை மையத்தின் அறிக்கை

இயற்கைப் பேரழிவுகள் தொடர்பாக முன்னெச்சாிக்கை மையத்தின் அறிக்கை

இயற்கைப் பேரழிவுகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய முன்னெச்சாிக்கை மையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இன்று பிற்பகல் 2 மணியளவில் வெளியிட்ட இவ்வறிக்கை எதிர்வரும் 11ம் திகதி பிற்பகல் 2 மணி வரை செல்லுபடியாகும்.

இதனடிப்படையில் நாட்டின் தென்கிழக்குப் பகுதியின் தாழமுக்க தளம்பல் நிலை காரணமாக நாட்டின் அநேக பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.