போராட்டம் இடம்பெற்ற இடத்தில் இருந்து வெளியேறாத அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை

போராட்டம் இடம்பெற்ற இடத்தில் இருந்து வெளியேறாத அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை

போராட்டம் இடம்பெற்ற இடத்தில் இருந்து வெளியேறாத அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளுவதற்காக பெயர் விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்தது.

இவ்வாறு போராட்டம் இடைநிறுத்தப்பட்டாலும் சில மாணவர்கள் உண்ணா விரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக போராட்டம் இடம்பெற்ற இடத்தில், தொடர்ந்து இருக்கின்ற அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.