யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சிலை தகர்ப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களுக்குப் பிணை!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சிலை தகர்ப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களுக்குப் பிணை!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று இரவு இடம்பெற்ற அமைதியற்ற நிலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதையடுத்து பிணை வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து தலா 50,000 ரூபா சரீர பிணையில் விடுதலை செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவுத் துாபி தகர்க்கப்பட்டமைக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே மேற்படி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.