கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த சிறைக் கைதிகளின் எண்ணிக்கை உயர்வு...!

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த சிறைக் கைதிகளின் எண்ணிக்கை உயர்வு...!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளில் தற்போது 3499 பேர் குணமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றாளர்கள் 4250 பேர் பதிவாகியுள்ளதுடன், தொற்றுக்குள்ளானவர்களில் காவற்துறை அதிகாரிகள் 120 பேர் குணமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறைக் கைதிகளில் 5 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன், 614 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது

அத்துடன் 9 காவற்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.