உயிரிழந்த யாசகரிடமிருந்து ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபா பணம் மீட்பு...!
கிளிநொச்சி நகரத்தில் நீண்ட நாட்களாக யாசகத்தில் ஈடுபட்டு வந்க 60 வயதுடைய நபரொருவர் திடீரென நோய்வாய்பட்டமை காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது உயிரிழந்துள்ளதுடன் அரசாங்கத்தின் செலவில் உடலை அடக்கம் செய்யும் வரை வைத்தியசாலையின் பிரேத அறைக்கு உடலை கொண்டுச் செல்வதற்கு வைத்தியசாலையின் ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பின்பு யாசகரிடம் இருந்த பொருட்களை பரிசோதிக்கும் போது அவரிடம் ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபா பணத் தொகை காணப்பட்டதாக வைத்தியசாலையின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்