யாழ்ப்பாண நகர் நடைபாதை அங்காடி வர்த்தக நிலையம் பூட்டு! குடும்பத்துடன் தனிமைப்படுத்தல்
யாழ்ப்பாண நகர் நடைபாதை அங்காடியில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்காத வர்த்தக நிலையம் ஒன்று இன்று யாழ் மாநகர சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டு அங்கு கடமையாற்றும் 3 ஊழியர்களும் குடும்பத்துடன் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
கடந்த வாரம் யாழ்ப்பாண நகர நடைபாதை அங்காடி வர்த்தகர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
எனினும் அங்கு உள்ள வர்த்தக நிலையமொன்றில் உள்ளவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்காத காரணமாக இன்றைய தினம் அவர்கள் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்குப்படுத்தப்பட்டுள்ளனர்.