ஐநாவின் தலைமையகம் நியூயார்க் நகரில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட நாள்: 9-1-1951

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் 1951-ம் ஆண்டு இதே நாளில் நியூயார்க் நகரில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.

தேசங்களின் அணி இரண்டாம் உலகப்போர் நடக்காமல் தடுக்கத் தவறியதால் வலிமை மிக்க ஒரு புதிய அமைப்புக்கான தேவை எழுந்தது. மேலும் இரண்டாம் உலகப்போர் முடிவில் மற்றொரு உலகப்போர் நடைபெற்றுவிடக்கூடாது என மக்கள் அஞ்சத் தொடங்கினர். அவ்வாறு மீண்டும் ஒரு போர் மூண்டால் மனிதகுலம் தங்காது எனக்கருதியதால் வலிமையான ஒரு அமைப்பு தேவைப்பட்டது.

 

ஐக்கிய நாடுகள் அல்லது ஒருங்கிணைந்த நாடுகள் என்ற வார்த்தை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் டி.ரூஸ்வெல்டால் 1939 ஆம் ஆண்டு முதலில் பயன்படுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் என்ற வார்த்தை 1942 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் அதிகரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வந்தது.

 

1943 அக்டோபரில் அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, ரஷ்யா, ஆகிய நாடுகள் மாஸ்கோவில் ஒன்றுகூடி, உலகில் அமைதியை ஏற்படுத்த ஒரு தனி நிறுவனம் அமைக்கவேண்டும் என்று முடிவு செய்தனர். அதன் விளைவாக 1945 இல் சான்பிரான்சிஸ்கோ மாநாடு நடைபெற்றது. இதில் அச்சு நாடுகளுக்கு எதிராக 50 நாடுகள் கலந்து கொண்டன. அக்டோபர் 24 ஆம் நாள் ஐக்கிய நாடுகளின் நிறுவனம் நிறுவப்பட்டது. இதற்கென தனி சாசனம் வரையப்பட்டது. அதில் நிறுவனத்தின் நோக்கம், அதில் அமைக்கப்பட்ட சபைகள், அவற்றின் செயல்கள் ஆகியனபற்றித் தெளிவாகக் கூறப்பட்டன.

 

 

இந்த ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் 1951-ம் ஆண்டு இதே நாளில் நியூயார்க் நகரில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.

 

இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்

 

• 1788 - கனெடிகட் 5வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.

• 1793 - ஜான் பியர் பிளன்சார் வாயுக்குண்டில் பறந்த முதல் அமெரிக்கர் ஆனார்.

• 1816 - ஹம்பிறி டேவி சுரங்கத் தொழிலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட டேவி விளக்கை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்தார்.

• 1857 - கலிபோர்னியாவில் 7.9 ரிக்டர் நிலநடுக்கம் பதியப்பட்டது.

• 1858 - டெக்சாஸ் குடியரசின் கடைசித் தலைவர் அன்சன் ஜோன்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.

• 1972 - ஹொங்கொங்கில் குயீன் எலிசபெத் கப்பல் தீக்கிரையானது.

• 1974 - யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு முடிவடைந்தது.

• 1990 - நாசாவின் கொலம்பியா விண்ணோடம் ஏவப்பட்டது.

• 2001 - சீனாவின் ஷென்சூ 2 விண்கலம் ஏவப்பட்டது.