இன்றைய ராசி பலன்கள் 9.1.2021

இன்றைய ராசி பலன்கள் 9.1.2021

மேஷம்

திட்டமிட்ட காரியம் திசைமாறிச் செல்லும் நாள். உறவினர்களால் உபத்திரவங்கள் உண்டு. பயணங்களின்போது கைப்பொருளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வது நல்லது.

ரிஷபம்

முயற்சி கைகூடும் நாள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றத் துடிப்போடு செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினரின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். மகிழ்ச்சிப் பயணம் உண்டு.

மிதுனம்

விரக்தி நிலைமாறி விடிவு காலம் பிறக்கும் நாள். சமூக சேவையில் அக்கறை காட்டுவீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உதவுவர்.

கடகம்

இன்பங்கள் இல்லம் தேடி வரும் நாள். செலவுகளைக் குறைத்துச் சேமிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். தாய்வழி ஆதரவு உண்டு.

சிம்மம்

பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். தொல்லை கொடுத்து வந்தவர்கள் எல்லையை விட்டு விலகிச் செல்வர். நீண்டதூரப் பயணங்களால் நன்மை கிட்டும்.

கன்னி

கொடுக்கல்-வாங்கல்கள் திருப்தி தரும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். முயற்சியில் வெற்றி கிட்டும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

துலாம்

துன்பங்கள் தூளாகும் நாள். துணிந்து எடுத்த முடிவுகளால் வெற்றி கிட்டும். தொழில் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகுவர். புதிய திட்டங்கள் வெற்றி பெறும்.

விருச்சகம்

சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். வருமானம் திருப்தி தரும். கொடுக்கல் வாங்கல்களில் ஆதாயம் உண்டு. புதிய முயற்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

தனுசு

நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிக்கும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். தொழிலுக்காக எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் உண்டு.

மகரம்

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். எதிரிகளின் தொல்லைகுறையும். தொழில் சம்பந்தமாக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்

கும்பம்

அலைச்சல் கூடினாலும் ஆதாயம் கிட்டும் நாள். பணவரவு போதுமானதாக இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். சகோதர வழி ஒத்துழைப்பு கிட்டும்.

மீனம்

எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். மற்றவர்களின் விமர்சனங்களை மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம்.