யாழ் கொவிட் தொற்றை ஒழிப்பதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் - யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி
யாழ்ப்பாணத்தில் கொவிட் தொற்றை இல்லாது செய்வதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய கொவிட் நிலை பற்றி ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொது நிகழ்வுகள், ஆலய உற்சவங்கள் உள்ளிட்ட விழாக்களில் ஒன்றுகூடுபவர்களின் எண்ணிக்கையை 50ஆக மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான உலர் உணவுப் பொருட்களின் விநியோகம், வர்த்தக நிலையங்களை மீளத் திறப்பது மற்றும் பாடசாலைகளை ஆரம்பிப்பது பற்றியும் இதன் போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.