செர்ரி- ஏ: அட்லாண்டா அணியிடம் போராடி தோற்றது லஸியோ அணி!

செர்ரி- ஏ: அட்லாண்டா அணியிடம் போராடி தோற்றது லஸியோ அணி!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் மறைவு பாலிவுட் திரை உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் அவர் நடித்து முடித்துள்ள கடைசி திரைப்படமான ’Dil Bechara’ என்ற திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது சுஷாந்த்சிங் மறைவு காரணமாக அவருடைய கடைசி படமான ’Dil Bechara’ படத்தை முதலில் பெரிய திரையில் மட்டுமே வெளியிட வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ரசிகர்களின் இந்த கோரிக்கையை இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்களும் தனது டுவிட்டரில் முன்மொழிந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சுஷாந்த்சிங் கடைசி படமான ’Dil Bechara’ திரைப்படம் வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களும் தனது டுவிட்டரில் சற்றுமுன் உறுதி செய்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சுஷாந்த்சிங் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் ’Dil Bechara’ படத்தை பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.