யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி பொறியில்பீட மாணவனுக்கு கொரோனா

யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி பொறியில்பீட மாணவனுக்கு கொரோனா

யாழ்.பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பொறியியல் பீட மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் க.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 453 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனையிலேயே குறித்த மாணவனுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன்,

வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 124 மாணவர்கள் கல்வி கற்பதற்காக கிளிநொச்சி பொறியியல் பீடத்துக்கு வருகை தந்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இவ்வாறு வருகை தந்த மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு பி சி ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே 24 வயதுடைய மாணவன் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவன் வவுனியா வேப்பங்குளத்தைச் சேர்ந்தவன்.இதனையடுத்து ஏனைய மாணவர்கள் அனைவரும் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.