
பெண்களே தெரிஞ்சிக்கங்க… அதிகநேரம் தூங்கினால் வரும் ஆபத்து! எப்படிப்பட்ட சூழலில் தூங்கினால் நல்லது!
மனிதன் குறைந்தது ஒரு நாளைக்கு 8 மணிநேரமாவது தூங்க வேண்டும். அப்படி தூங்கவில்லையென்றால் உடல் அசதி, சோர்வு ஆகிய உடல் உபாதைகள் வரக்கூடும். ஆனால், அதையே பழக்கமாக வைத்து 8 மணி நேரத்துக்கு மேல் யாரும் தூங்கவே கூடாது.
அதிகநேரம் தூங்குவதனால் மன அழுத்தம் உடையவர்களுக்கு தூக்கம் ஒரு நல்ல மருந்தாக இருக்கும். குறைந்தது 8 மணி நேரமாவது ஒரு மனிதம் தூங்க வேண்டும், அதிலும் இரவில் தான் நன்றாக தூங்க வேண்டும். காரணம், அச்சமயம் மூளை, இதயம் ஆகியவற்றின் செயல்பாடானது குறைவாகவே இருக்குமாம்.
அதிக நேரம் தூங்கினால் வரும் விளைவுகள்
அதேசமயம் 8 மணி நேரத்துக்கு மேல் தூங்கினால் இருதய நோய் பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம்.
அதிக நேரம் தூங்குபவர்கள் 41 சதவிகிதம் இறப்பு நேர்வதற்கான அபாயமும் இருக்கிறது.
நன்கு தூங்கினால் தான் காலை எழும்போது மூளை, இருதயம் புத்துணர்ச்சியாக இருக்கும். நாம் எந்த வேலை செய்தாலும் மனதும் புத்துணர்ச்சியாகவே இருக்கும்.
குறைவாகவும் தூங்ககூடாது. அதிகமாகவும் தூங்க கூடாது. சரியான அளவு தூக்கம் தான் உடலையும், மனதையும் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவி செய்யும்.
பெண்கள் அதிகநேரம் தூங்குவதனால் கருத்தறிப்பு குறைவாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதனால் தான் மாதவிடாய் சுழற்சி, ஹார்மோன்கள் சுரப்பதில் மாற்றம் ஏற்படும்.
அதிகநேரம் தூங்குவதனால் உடல் எடை 21 சதவிகிதம் அதிகமாகும்.
அதிகநேரம் தூங்குபவர்களுக்கு ஆயுட் காலம் குறையும் என்பது மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு நாம் எவ்வளவு தூங்க வேண்டும்
வயது வந்த நபர்களுக்கு சராசரியாக ஏழு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை தூங்கினால் போதும்.
புதிதாகப் பிறந்த குழந்தைகள் பாதிப் பொழுதைத் தூக்கத்தில் கழிக்கும்.
முதல் ஐந்து வயதுக்குள் இது படிப்படியாகக் குறையும்.
மீண்டும் பருவ வயதிலும், பின்னர் 50 வயதுக்குப் பிறகும் தூக்கத்தின் தேவை மேலும் குறையும்.
மதியம் தூங்கலாமா?
தூக்கம் வந்தாலும் மதியத்தில் ஒரு மணி நேரம் தூங்கினால் போதும். ஆனால் மதியம் மூன்று மணிக்கு மேல் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
மதியம் தூக்கம் இரவு நேர தூக்கத்தை கெடுத்து விடும்.
மதியம் 4 மணி நேரம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
நன்றாக தூங்குவதற்கு ஏற்றது
அமைதியான இடம், நல்ல காற்று வசதி நன்கு கொண்ட அறை நன்றாக தூக்கத்திற்கு உதவி செய்யும்.
மெத்தை மற்றும் தலையணைகள் சரியான நிலையில் இருக்க வேண்டும். உதாரணமாக காலையில் எழும்போது முகுது வலியோ, கழுத்து வலியோ இருந்தால் உடனே மெத்தையையும், தலையணையையும் மாற்றிவிட வேண்டும்.
சத்தம் இல்லாத சூழ்நிலை தூங்குவதற்கு சிறந்தது. சின்ன சப்தங்களுக்குக்கூட விழிப்பு ஏற்படுத்தி விடலாம். இதைத் தவிர்க்க, காதில் பஞ்சுவைத்துக் கொண்டு தூங்கலாம்.
இருட்டான அறையில் தூங்குவது சிறந்தது. வெளிச்சம் இருக்குமானால், உங்கள் உடலில் இயற்கையாக உள்ள சில சுழற்சிகள் தூண்டப்பட்டு சரியாகத் தூக்கம் கிடைக்காது.
தூக்கத்துக்கு அதிக வெப்பம், அதிகப் புழுக்கம், அதிகம் குளிர்ந்த அறை உடலுக்கு ஏற்றதல்ல. பொதுவாக, நல்ல தூக்கத்துக்கு 20 முதல் 25 டிகிரி வரையான வெப்பம் சரியாக இருக்குமானால் அது சிறந்தது.