இலங்கையில் பணவீக்கம் அதிகரிப்பு!
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் 4.2 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்ததுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது கடந்த நவம்பரில் 4.1 சதவீதமாக காணப்பட்ட நிலையில் டிசம்பர் மாதத்தில் 4.2 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, உணவுப் பணவீக்கமானது கடந்த நவம்பரில் 10.3 சதவீதத்திலிருந்து டிசம்பர் மாதத்தில் 9.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்ததுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.