இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று..!

இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று..!

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டியானது இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 க்கு இடம்பெறவுள்ளது.

இலங்கை அணியின் 5 வீரர்கள் காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளதுடன், மேலும் இரண்டு வீரர்களின் உடல் தகுதி குறித்து தொடர்ந்தும் அவதானிக்கப்பட்டு வருவதாக டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா, லஹிரு குமார, ஓசத பெர்ணாண்டோ மற்றும் கசுன் ராஜித்த ஆகியோர் தொடரில் இருந்து விலகியுள்ளதாக திமுத் கருணாரட்ன நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அத்துடன், வனிந்து ஹசரங்க மற்றும் சுரங்க லக்மால் ஆகியோரது உடல் தகுதியின் அடிப்படையில் அவர்களை இணைத்துக்கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்றைய தினம் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் துடுப்பாட்ட வீரரான மினோட் பானுக ( ஆiழென டீhயரெமய) மற்றும் வேகப்பந்து வீச்சாளரான அசித்த பெர்ணாண்டோ ஆகியோர் இன்றைய போட்டி மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கட்டில் அறிமுகமாவார்கள் என எதிர்ப்பார்கப்படுகின்றது.