முல்லைத்தீவில் மினி சூறாவளி

முல்லைத்தீவில் மினி சூறாவளி

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சிலாவத்தை தீர்த்தக் கரை பகுதியில் இன்று மாலை 4.15 மணியளவில் வீசிய மினி சூறாவளி காரணமாக மீனவரின் வாடி ஒன்று சேதமடைந்துள்ளதோடு மேலும் சில கட்டடங்களில் பகுதியளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது.

4.15 மணியளவில் திடீரென கடற்கரையில் இருந்து இந்த மினி சூறாவளி வந்ததாகவும் திடீரென தனது வாடியை ஊடறுத்து சென்றதாகவும் இதனால் வாடியின் கூரை பகுதி தூக்கி வீசப்பட்டுள்ளதோடு வாடியில் இருந்த பொருட்கள் சிலவும் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்தார்.

தீடீரென ஏற்பட்ட இந்த சூறாவளி எவருக்கும் உயிர் சேதங்கள் காயங்கள் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.