உருமாற்றமடையும் புதிய கொரோனா வைரஸ்!

உருமாற்றமடையும் புதிய கொரோனா வைரஸ்!

கொரோனா வைரஸின் புதிய உருமாற்றமானது, இனப்பெருக்கம் அல்லது ஆர் இலக்கத்தை 0.4 முதல் 0.7 க்கு இடையில் அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸின் புதிய உருமாற்றமானது, முன்னைய வைரஸை விடவும், வேகமாக பரவக்கூடியது என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஆர் இலக்கம் எனப்படுவது கொரோனா வைரஸை மதிப்பிடுவதற்கான ஒரு வழியாகும் என்பதுடன், எந்தவொரு நோயையும் பரப்பும் திறன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுக்கு உள்ளான ஒருவர் அந்த வைரஸை சராசரியாக எத்தனை நபர்களுக்கு பரப்புகிறார் என்ற எண்ணிக்கை ஆர் என்று குறிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் புதிதாக கண்டறியப்பட்ட வைரஸின் ஆர் இலக்கம், 1.1 க்கும் 1.3 க்கும் இடைப்பட்டதாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று எண்ணிக்கை வீழ்ச்சியடையவேண்டுமாயின், இது 1.0 இற்கு கீழே இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய உருமாறுபாடு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள லண்டன் இப்பிறியல் கல்லூரி பேராசிரியர் எக்செல் கென்டி, வைரஸ்களுக்கு இடையிலான மாறுபாடு மிகவும் தீவிரமானது எனத் தெரிவித்துள்ளார்.

மாறுபாடுடனான வைரஸ் எவ்வாறு இலகுவாக பரவுகின்றது என்பதில் பாரிய வித்தியாசம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமையானது, கொவிட் பரவல் ஆரம்பமானதிலிருந்து வைரஸில் ஏற்பட்ட மிகக் கடுமையான மாற்றம் என அவர் தெரிவித்துள்ளார்