
2021 வருடத்தில் இந்தியா 21 டெஸ்ட், 12 ஒருநாள், 21 டி20 போட்டிகள், உலக கோப்பை, ஐபிஎல், ஆசிய கோப்பை என தொடர்ச்சியாக பல போட்டிகளில் விளையாடுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த வருடம் (2020) மார்ச் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை இந்திய கிரிக்கெட் அணி எந்த போட்டிகளிலும் விளையாடவில்லை. செப்டம்பர் மாதம்தான் ஐபிஎல் தொடரில் விளையாடியது.
நான்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியது. பல்வேறு தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டன.
ஒத்திவைக்கப்பட்ட பல்வேறு தொடர்கள் இந்த வருடம் நடத்தப்பட இருக்கின்றன. கிரிக்கெட் ரசிகர்கள் போதும்போதும் என்ற அளிவிற்கு இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச போட்டிகளில் விளையாட இருக்கிறது.
ஐபிஎல், டி20 உலக கோப்பை, ஆசிய கோப்பை ஆகிய டி20 தொடர்களை தவிர்த்து 21 டெஸ்ட், 12 ஒருநாள், 21 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
தற்போது இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. கடைசி டெஸ்ட் போட்டிகள் ஜனவரி 7-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி நடக்கிறது. அதன்பின் இந்திய அணி சொந்த நாடு திரும்புகிறது.
பிப்ரவரியில் இருந்து மார்ச் மாதம் வரை இங்கிலாந்து அணி இந்தியா வருகிறது. அப்போது நான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்கள் நடைபெறுகிறது.
ஏப்ரல் மாதத்தில் இருந்து மே மாதம் வரை ஐபிஎல் கிரிக்கெட் நடக்கிறது.
ஜூன் - ஜூலையில் இலங்கை சென்று 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதன்பின் ஆசிய கோப்பை தொடரில் விளையாடுகிறது.
அதன்பின் ஜிம்பாப்வே சென்று 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
ஆகஸ்ட் - செப்டம்பரில் இங்கிலாந்து சென்று ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
அக்டோபர் மாதம் தென்ஆப்பிரிக்கா அணி இந்தியா வந்து 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதன்பின் அக்டோபர் மாதம் மத்தியில் இருந்து நவம்பர் மாதம் தொடக்கம் வரை டி20 உலக கோப்பை தொடரில் விளையாடுகிறது.
நவம்பர்-டிசம்பரில் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட், மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
டிசம்பர் மாதம் தென்ஆப்பிரிக்கா சென்று மூன்று டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.