அமெரிக்க டொலருக்கு எதிராக இன்றும் அதிகரித்தது இலங்கை ரூபாவின் பெறுமதி
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் வலுப்பெற்றதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (31) வெளியிட்டுள்ள தினசரி பரிமாற்ற வீத அட்டவணையின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ. 184.12 மற்றும் விற்பனை விலை ரூ. 189.18 ஆகும்.
டிசம்பர் 16 முதல் அமெரிக்க டொலருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த கொள்முதல் மற்றும் விற்பனை விலை இதுவாகும்.
கடந்த வாரம், டிசம்பர் 24 நிலவரப்படி, ஒரு டொலரின் கொள்முதல் விலை ரூ. 189.08 ஆகவும், விற்பனை விலை ரூ. 194.66ஆக இருந்தது.