யாழில் மேலும் பலருக்கு கொரோனா தொற்று உறுதியானது!

யாழில் மேலும் பலருக்கு கொரோனா தொற்று உறுதியானது!

யாழ். மருதனார்மடம் கோரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் 9 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதை அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வுகூடத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 9 பேருக்கும் தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இதன்மூலம் மருதனார்மடம் கோரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட 20ஆவது நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 127ஆக உயர்வடைந்துள்ளது.

மருதனார்மடம் சந்தையில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான வியாபாரியுடன் நேரடித் தொடர்புடைய உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 8 பேருக்கு தொற்று உள்ளதாக கண்டறிப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் இவ்வாறு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இவர்கள் 9 பேரும் 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தபட்டவர்கள் என்றும் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.