3 அடி நீளத்தில் வளர்ந்துள்ள பைற்றங்காய் (படங்கள்)
அக்குரஸ்ஸ பகுதியில் உள்ள வீட்டுத் தோட்டமொன்றில் இருந்து 3 அடி நீளமான பைற்றங்காய் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வசிக்கும் ஜயந்த ஹேவகே என்ற 39 வயதுடைய நபரொருவரின் வீட்டுத் தோட்டத்தில் இருந்தே இவ்வாறு பைற்றங்காய் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் இவர் குறித்த வீட்டுத்தோட்ட பயர் செய்கையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், குறித்த ஒரு பைற்றங்காயை தவிர ஏனையவை எல்லாம் சாதாரண அளவில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.