
முல்லைத்தீவில் இடியன் துப்பாக்கியுடன் சிக்கிய நபர்
முல்லைத்தீவு - ஆறுமுகத்தான்குளம் பகுதியில் சட்டவிரோதமாக தயாரித்த இடியன் துப்பாக்கியை வீட்டில் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு குறித்த நபரிடமிருந்து இடியன் துப்பாக்கியும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
ஆறுமுகத்தான்குளம் பகுதியில் வீட்டில் ஒருவர் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட துப்பாக்கி வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டை சுற்றி வளைத்த பொலிஸார்,
துப்பாக்கியையும் துப்பாக்கி வைத்திருந்த ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் முல்லைத்தீவு பொலிஸார், இன்று அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்