
தென்னாபிரிக்காவில் ஊரடங்கு உத்தரவு
COVID – 19 தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தென்னாபிரிக்காவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தென்னாபிரிக்காவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்துள்ளது.
இதனையடுத்து, உள்ளக மற்றும் திறந்த வௌியில் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மதுபான விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் இரவு 9 மணி தொடக்கம் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி சிறில் ரமபோஷா தெரிவித்துள்ளார்.
புதிய கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் தென்னாபிரிக்க அரசு அறிவித்துள்ளது.