இலங்கையில் 9 நாட்களில் 39 பேர் பரிதாபமாக மரணம்! ஜனவரி 5 வரை ஆபத்து
டிசம்பர் 20 முதல் இன்று (29) வரை நாட்டில் ஏற்பட்ட விபத்துக்களில் 39 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதை தெரிவித்தார்.
மேலும், அந்த காலக்கட்டத்தில் 527 விபத்துக்கள் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இந்த விபத்துக்களில் 122 பேர் பலத்த காயமடைந்தனர், 238 பேர் லேசான காயமடைந்தனர் மற்றும் 130 பேர் சாலை விபத்துக்களில் காயமடைந்தனர் என்று கூறினார்.
இதற்கிடையில், கடந்த அறிக்கையின் படி, நாட்டில் அதிக விபத்துக்கள் டிசம்பர் 20 முதல் ஜனவரி 05 வரை நடக்கும் என்று தெரிவித்தார்.
இதுபோன்ற விபத்துக்களைத் தடுப்பதற்காக சிறப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும் பாதசாரிகள், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் முச்சக்கர வண்டி விபத்துக்களிலேயே அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் நிகழ்ந்துள்ளதாகவும் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.