கூட்டுறவு மொத்தவிற்பனை நிறுவனத்தின் தலைவராக சட்டத்தரணி வெனுர குணவர்தன நியமனம்..!

கூட்டுறவு மொத்தவிற்பனை நிறுவனத்தின் தலைவராக சட்டத்தரணி வெனுர குணவர்தன நியமனம்..!

கூட்டுறவு மொத்தவிற்பனை நிறுவனத்தின் தலைவராக சட்டத்தரணி வெனுர குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

வர்த்தகத்துறை அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த நியமனங்கள் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துள குணவர்தனவினால் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

அதேநேரம் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நுசாட் பெரேரா, இலங்கை தரநிர்ணயசபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.