தாவரவியல் பூங்காங்களை சுற்றுலாத் தளமாக மாற்ற நடவடிக்கை!
நாட்டில் உள்ள தாவரவியல் பூங்காக்களை அபிவிருத்தி செய்வதற்காக 517 மில்லியன் ரூபா ஒதுக்கிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பேராதெனிய, கம்பஹா, ஹக்கல, சீதாவாக்க மற்றும் மிரிஜ்ஜவில ஆகிய தாவரவியல் பூங்காக்களை அடுத்த வருடத்தில் அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலா அமைச்சின் கீழ் தாவரவியல் பூங்காக்கள் இருப்பதால் அனைத்தையும் அபிவிருத்தி செய்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற தளங்களாக மாற்றுவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.