சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடும் நடவடிக்கைகள் இராணுவத்தினாிடம் ஒப்படைப்பு!

சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடும் நடவடிக்கைகள் இராணுவத்தினாிடம் ஒப்படைப்பு!

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் நடவடிக்கைகள் எதிர்வரும் 1ம் திகதி முதல் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படுமென போக்குவரத்து ஆணையாளர் சுமித் அலஹகோன் தொிவித்துள்ளார்.

11 ஆண்டுகளாக தென்னாபிாிக்க நிறுவனமொன்றினால் இச்சாரதி அனுமதிப் பத்திரங்கள் அச்சிடப்பட்டு வந்துள்ளன.

புதிய அரசு ஆட்சிக்கு வந்ததன் பின் அவ்வொப்பந்தத்தை இரத்து செய்வதற்கு திர்மானிக்கப்பட்டதோடு அதனை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனால் வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு இதுவரை சென்றுகொண்டிருந்த பெருமளவான பணம் மீதப்படுத்தப்படுமென தொிவிக்கப்படுகின்றது.

மாதம் ஒன்றுக்கு 60,000 - 90,000 வரை விநியோகிக்கப்படுவதாக போக்குவரத்து ஆணையாளர் தொிவித்துள்ளார்.