நாட்டில் இன்றும் மழையுடனான காலநிலை...!
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளைகளில் 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பகுதியில் இடைஇடையே 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்கு பின்னர் 75 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழைபெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமும் அதிகரித்து காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.