இராணுவத் தளபதி விடுத்துள்ள கண்டிப்பான உத்தரவு
கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழக்கும் நபர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டும் எனும் நிபுணர்களின் பரிந்துரைக்கு அமைய செயற்பட வேண்டியது அனைத்துப் பிரஜைகளினதும் கடமை என இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளர்.
இவ்வாறு இறக்கும் நபர்களின் உடல்கள் சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் தீர்மானத்திற்கு அனைத்து தரப்பினரும் இணங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்கும் நபர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டும் என அந்த நிபுணர்கள் குழு பரிந்துரைத்திருந்தது.
எனினும் கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இருப்பினும் இதுவரை கொரோனா தொற்றால் இறந்தவர்களின் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள் என தெரிவித்துள்ளார்.