வெளிமாவட்டங்களிலிருந்து ஹப்புத்தளைக்கு சென்ற 28 பேருக்கு PCR பரிசோதனைகள்..!
வெளி மாவட்டங்களில் இருந்து ஹப்புத்தளை பகுதிக்கு பிரவேசித்த நிலையில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்பட்ட 28 பேருக்கும் இன்றைய தினம் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஹப்புத்தளை பொது சுகாதார பரிசோதகர் ரோய்விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிட்டரத்மலை பகுதியில் முன்னதாக கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்ட 26 வயதுடைய பெண்னுடன் தொடர்புடைய 5 குடும்பங்களை சேர்ந்த 22 பேருக்கும் இன்றைய தினம் பீ.சி. ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.