திருகோணமலையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்..!
திருகோணமலை - கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட அஹமட் லேன் பகுதியில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது.
10 வயது சிறுவனுக்கும், 55 வயதுடைய ஒருவருக்குமே இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கடந்த 23ஆம் திகதி அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதேவேளை மூதூர் பிரதேசத்தில் இரண்டு பேருக்கும், கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட எத்தாபெந்திவௌ பகுதியில் 58 வயதுடைய நபருக்கு பெறப்பட்ட எண்டிஜென் பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.
அத்துடன் கடந்த 18 ஆம் திகதி முதல் இதுவரையில் திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 107 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.