தாயகம் திரும்பிய 6 பேருக்கு கொரோனா..!
நேற்றைய தினம் நாடு திரும்பிய ஆறு பேருக்கு கொவிட்19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர்களில் ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வந்த தலா ஒருவரும், இத்தாலி மற்றும் பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பிய இரண்டு பேரும் அடங்குகின்றனர்.
8 ஆயிரத்து 162 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம், நேற்றைய தினம் 650 கொவிட் 19 நோயாளர்கள் குணமடைந்தனர்.
இதன்படி, நாட்டில் இதுவரையில் 32 ஆயிரத்து 701 நோயாளர்கள் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.