கண்டுபிடிக்கப்பட்ட 10 கொரோனா நோயாளிகளும் சிகிச்சை நிலையம் அனுப்பி வைப்பு

கண்டுபிடிக்கப்பட்ட 10 கொரோனா நோயாளிகளும் சிகிச்சை நிலையம் அனுப்பி வைப்பு

பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்டபகுதிகளில் இன்று .ஞாயிற்றுகிழமை இனங்காணப்பட்ட 10 கொரோனா தொற்றாளர்களும் மாத்தறை கம்புருகமுவ கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு

அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்

குறித்த பத்து தொற்றாளர்களும் சுகாதார முறைமையோடு அனுப்பி வைக்க்பட்டதாக சுகாதார அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இதன் போது நோர்வுட் வெஞ்சர் கிழ் பிரிவு தோட்டபகுதியில் மூன்று தொற்றாளர்களும் டிக்கோயா இன்ஞஸ்ரீ தோட்டபகுதியில் ஐந்து தொற்றாளர்களும் நோர்வுட் போற்றி மற்றும் டிக்கோயா பட்ல்கல ஆகிய தோட்டபகுதியில் இருவருமென பத்து தொற்றாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது