இலங்கையில் கொரோனா தொற்றில் உயிரிழந்தோர் விபரம் வயதெல்லை ரீதியாக வெளியீடு
இலங்கையில் கொரோனா இரண்டாவது அலையில் உயிரிழந்தோரின் வயதெல்லையை கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் வெளியிட்டுள்ளது.
இதன்படி 70 வயதிற்கு மேற்பட்டவர்களின் உயிரிழப்பே அதிகரித்து காணப்படுகிறது.
இதேவேளை இலங்கையில் கொவிட் முதலாவது அலையில் 13 பேரும், இரண்டாவது அலையில் 174 பேரும் உயிரிழந்துள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
இதன்படி, நாட்டில் மொத்தமாக 187 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயதெல்லை உயிரிழப்பு
0-9 1 (0.57%)
10-30 4 (2.30%)
31-40 5 (2.87%)
41-50 18 (10.34%)
51-60 28 (16.09%)
61-70 34 (19.54%)
71ற்கு மேல் 84 (48.28%)