
யாழில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 393 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் சங்கானை பகுதியில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட தென் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், கோப்பாய் விசேட சிகிச்சை நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் மற்றும் கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் மருதனார்மடம் கோரோனா கொத்தணியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 110ஆக உயர்வடைந்துள்ளது.