தந்தந்துடன் உயிரிழந்த காட்டு யானை - விசாரணைகள் தீவிரம்

தந்தந்துடன் உயிரிழந்த காட்டு யானை - விசாரணைகள் தீவிரம்

கிளிநொச்சி - கல்மடு பிரதேசத்தில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

நேற்றிரவு குறித்த பகுதிக்கு வந்த காட்டு யானை, வயலை உணவாக்கி அழித்துள்ளதுடன், அப்பகுதியில் உயிரிழந்துள்ளது.

இன்று காலை வயல் நிலத்தை பார்வையிடச் சென்றவர் யானை உயிரிழந்திருப்பது தொடர்பில் கிராமசேவையாளர் ஊடாக வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

உயிரிழந்த யானை தந்தந்துடன் காணப்படுவதுடன், மக்கள் அதனை பார்வையிட்டு வருகின்றனர்.

யானை உயிரிழந்தமை தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸாரும், வன ஜீவராசிகள் திணைக்களமும் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.