முதல்வர் தெரிவில் யாருக்கு ஆதரவு! அமைச்சர் டக்ளஸ் வெளியிட்ட தகவல்
எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள நல்லூர் பிரதேச சபை மற்றும் யாழ் மாநகர சபை முதல்வர் தெரிவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யாருக்கு ஆதரவினை வழங்கவுள்ளது என இன்னும் தீர்மானிக்கவில்லை என கட்சியின் தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி யாருக்கு ஆதரவினை வழங்கவுள்ளது என்பது தொடர்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் எழுத்து மூலமான எந்த கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை.
எனினும் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் நாங்கள் அனைவருடனும் பேசிக் கொண்டிருக்கின்றோம்.
நல்லூர் பிரதேச சபையில் ரெலோவிற்கு ஆதரவு வழங்கப் போகின்றோம் என்ற விடயத்திலும் எந்த உண்மையுமில்லை.
நாம் அனைவருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றோம் தகுந்த நேரத்தில் முடிவு அறிவிக்கப்படும் என்றார்.