யாழில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று.
யாழ். மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் மேலும் 4 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
மில்லேரியா மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிலைய ஆய்வுகூடங்களில் இன்று( 26) முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் இவர்களுக்கு தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இதன்மூலம் மருதனார்மடத்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட 16ஆவது நாளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 109ஆக உயர்வடைந்துள்ளது.
சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த மருதனார்மடம் சந்தை வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடைய நான்கு பேரே இவ்வாறு தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர்.
முல்லேரியா ஆய்வுகூடத்தில் முன்னெடுக்கப்பட்ட 3 பேருக்கும், கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிலைய ஆய்வுகூடத்தில் முன்னைடுக்கப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்று உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.