முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பம்..!

முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பம்..!

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டியானது இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 க்கு ஆரம்பமாகும்.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மால் காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவருக்கு பதிலாக கசுன் ராஜித்த அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திமுத் கருணாரட்ன தலைமையிலான இலங்கை அணியும் , குயின்டன் டீ குக் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும் இந்த போட்டியில் மோதவுள்ளன.