பரிதாபமாக பலியான இளம் குடும்பஸ்தர் - கிளிநொச்சியில் சோகம்

பரிதாபமாக பலியான இளம் குடும்பஸ்தர் - கிளிநொச்சியில் சோகம்

கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கல்மடுக்குளத்திற்குள் மூழ்கி ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று (25) பிற்பகல் இரண்டு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நண்பர்களுடன் சென்ற குறித்த நபர் குளத்திற்குள் இறங்கிய போதே மூழ்கி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்மடுநகர் சம்புக்குளத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இரத்தினம் லோகிதன் என்பவரே இச்சம்பவத்தில் மரணமடைந்துள்ளார்.