யாழ் யுவதிகளின் வங்கி அட்டையில் மதுபானம் கொள்வனவு? சந்தேக நபர்களுக்கு பொலிஸார் வலைவீச்சு!
யாழில் இரு யுவதிகளின் வங்கி அட்டைகளை திருடி, மதுபானம் கொள்வனவு செய்த நபர்களை பொலிசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கடந்த 21 ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணம் அடைக்கலமாதா கோவிலில் கிறிஸ்மஸ் கரோல் நிகழ்ச்சியில் பங்கேற்ற இரண்டு பெண்களின் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த கைப்பை திருடப்பட்டிருந்தது.
சந்தேகநபர்கள் யுவதிகளில் பையிலிருந்த வங்கி (ஏ.ரி.எம்) அட்டைகளைப் பயன்படுத்தி 4 ஆயிரம் ரூபாவுக்கு மதுபானம் கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதேவேளை தமது கைப்பையில் 5 ஆயிரம் ரூபா பணம் இருந்ததாகவும், தமது தேசிய அடையாள அட்டை வீதியில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட உவதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்த நிலையில் சந்தேகநபர்களை பொலிஸார் தேடிவருகின்றனர்.