யாழில் கலாசார சீரழிவில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட நால்வர் கைது!

யாழில் கலாசார சீரழிவில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட நால்வர் கைது!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் வீடொன்றில் கலாசார சீரழிவு நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்கள், ஒரு ஆண் மற்றும் விடுதி உரிமையாளர் என நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொக்குவில் பொற்பதி வீதியில் விடுதியாக இயங்கும் வீடொன்றில் கலாசார சீரழிவு இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் யாழ் மாவட்ட சிறப்பு பொலிஸ் பிரிவினர், குறித்த வீட்டை இன்று வியாழக்கிழமை சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தினர்.

அதன்போது யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவரும், ஆண் ஒருவரும் விடுதி உரிமையாளரும் என நால்வர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் நால்வரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதோடு, விசாரணைகளின் பின்னர் அவர்கள் நால்வரும் நாளை யாழ் மேலதிக நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.