வடக்கில் தீவிரமடையும் கொரோனா! இரு மாவட்டங்களில் பலருக்கு தொற்று
வடக்கில் இன்று மாத்திரம் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் 9 பேருக்கும் கிளிநொச்சியில் ஒருவருக்குமாக தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் ஆகிய இரண்டு இடங்களிலும் 601 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்
10 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதில் யாழ். பல்கலைக்கழக ஆய்வுக்கூடத்தில் 120 பேருக்கும் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூடத்தில் 481 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி - யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எட்டு பேருக்கும், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்குமாக 9 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் ஒருவருக்குமாக இன்றைய தினம் வடக்கில் மொத்தமாக பத்து பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.