யாழில் தலை தூக்கும் டெங்கு அபாயம்
நிலவும் சீரற்ற வானிலையுடன், யாழ். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் நிலவுவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சில பகுதிகளில் வௌ்ள நீர் தேங்கி நிற்பதால் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடும் என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் டி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சலை தவிர வயிற்றோட்டம் உள்ளிட்ட தொற்று நோய்கள் ஏற்படுவற்கான சாத்தியமுள்ளதால், மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் என வைத்தியர் டி. சத்தியமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.